அழுது காட்டியதால் நடிகைக்கு சான்ஸ் : இயக்குனர் பேட்டி|TechRenu
சென்னை: அழுதுகாட்டிய நடிகையை ஹீரோயினாக தேர்வு செய்தார் இயக்குனர். 'சான்றோன், 'ஓணான் படத்துக்கு வசனம், ஸ்கிரிப்ட் எழுதியவர் ரா ரா. இவர் இயக்கும் படம் 'கல்லாபெட்டி. இது பற்றி அவர் கூறியதாவது: வெட்டியாக பொழுதை கழித்துக்கொண்டு ஜாலியாக சுற்றித் திரிகிறான் ஒருவன். பிரச்னைகளை சந்திக்கும்போது அதை நினைத்து அழுது ஆறுதல் அடையும் பெண்ணுக்கும் இடையே மலரும் நட்பு காதலாகிறது. வாழ்க்கை நடத்துவதற்கு பணம் முக்கிய தேவை என்பதை ஒரு கட்டத்தில் இவர்கள் உணர்கின்றனர். இதன் முடிவு எப்படி அமைகிறது என்பது கிளைமாக்ஸ். அஸ்வின் பாலாஜி ஹீரோ. ரோசின் ஜாலி ஹீரோயின். கருப்பு வெள்ளை படங்களில் நடித்த ஹீரோயின்களில் அழுகையை வெளிப்படுத்துவதில் ஒருவரையொருவர் மிஞ்சிவிடுவார்கள். அப்படியொரு ஹீரோயின் இப்படத்திற்கு தேவைப்பட்டார். அழுதுகாட்டும் காட்சியில் நடிக்க பல பெண்களுக்கு டெஸ்ட் வைத்தபோது திருப்தியாக அமையவில்லை. மலையாளத்தில் சில படங்களில் நடித்திருந்த ரோசின் ஜாலி பொருத்தமாக அமைந்தார். அவரை தேர்வு செய்தேன். நமோ நாராயணன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை சபேஷ் முரளி. ஒளிப்பதிவு ஜி.செல்வகுமார். தயாரிப்பு பி.எஸ்.கருணாநிதி. ராசிபுரம், நாமக்கல், ஆத்தூர், சேலம் பகுதிகளில் ஷூட்டிங் நடந்து முடிந்துள்ளது.
ஐதராபாத்: இயக்குனர் புரி ஜெகன்நாத் அலுவலகத்தை தெலங்கானா ஆதரவாளர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவை பிரித்து தெலங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என போராட்டம் நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இப்போராட்டம் நடந்தபோது ஸ்ரேயா நடித்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் நடந்து கொண்டிருந்தது. அங்கு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஷூட்டிங்கை நிறுத்தும்படி கூறியதுடன் தெலங்கானாவுக்கு ஆதரவாக கோஷம்போடும்படி ஸ்ரேயாவை வற்புறுத்தினார்கள். இதற்கு ஸ்ரேயா மறுப்பு தெரிவித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பிரபல இயக்குனர் புரி ஜெகன்நாத் இயக்கிய 'கேமராமேன் கங்கா தோ ராம்பாபுÕ என்ற தெலுங்கு படம் சமீபத்தில் ரிலீஸ் ஆனது. பவன் கல்யாண் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் தெலங்கானா கோரிக்கைக்கு எதிராக காட்சிகள் இருப்பதாக கூறி ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள புரி ஜெகன்நாத் அலுவலகத்துக்குள் நேற்று கோஷங்கள் எழுப்பியபடி புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர் அலுவலகத்தை சூறையாடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் படம் வெளியிட்ட தியேட்டர்கள் சூறையாடப்பட்டது. தெலங்கானா பகுதியில் வெளியிட படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையில் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்படுகிறது.
வீட்டு கதவை தட்டி யாரும் வாய்ப்பு தரவில்லை - விஜயலட்சுமி வருத்தம்| TechRenu
சென்னை: வீட்டுக் கதவை தட்டி வாய்ப்பு தருவார்கள் என்று காத்திருந்து ஏமாந்துவிட்டேன் என்கிறார் நடிகை விஜயலட்சுமி. இதுபற்றி விஜயலட்சுமி கூறியது: 'சென்னை 28' படத்தில் என்னை வெங்கட் பிரபு அறிமுகப்படுத்தியபோது சினிமாவை பற்றி அதிகம் தெரியாமல் இருந்துவிட்டேன். படம் வெற்றி பெற்று பெரிய வரவேற்பு பெற்றபோதும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை. நடிப்பில் எனக்கு ஆர்வம் இருந்தபோதும், என் வீட்டு கதவை தட்டி யாராவது வாய்ப்பு தரட்டும்; நடிக்கலாம் என்று இருந்துவிட்டேன். அது என்னை ஏமாற்றிவிட்டது. இதெல்லாம் நான் செய்த தவறு என்று இப்போதுதான் உணர்கிறேன். 'அஞ்சாதே', 'அதே நேரம் அதே இடம்' என ஒரு சில படங்களில் நடித்தேன். சில படங்களை தேர்வு செய்யும்போது தவறாக கணித்ததும் நான் செய்த மற்றொரு தவறு. இப்போது புதுமுகம்போல் நடிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டேன். சி.எஸ்.ஆனந்தன் இயக்கும் 'ரெண்டாவது படம்' என்ற படத்தில் நடிக்கிறேன். இந்த கதாபாத்திரத்தை நான் தவறவிட விரும்பவில்லை. இது எனக்கு இரண்டாவது இன்னிங்ஸ். இதில் வெற்றி பெறுவேன். இவ்வாறு விஜயலட்சுமி கூறினார்.
0 comments:
Post a Comment